தொடக்கநிலை ஆய்வுகள்: என்எப்சி-யில் சிபிடி குற்றம் எதுவும் நிகழவில்லை

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) விவகாரத்தில் நம்பிக்கை மோசடி குற்றம் நிகழ்ந்திருப்பதற்கான தடயம் எதனையும் போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

அரசாங்கத்திடமிருந்து ரிம250மில்லியன் கடன் பெற்ற அமைச்சர் ஒருவரின் குடும்பத்தாருக்குச் சொந்தமான அந்த நிறுவனம், குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான சான்றுகள் தொடக்கநிலை விசாரணைகளில் தெரிய வரவில்லை என்று போலீஸ் படை துணைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.

இதுவரை என்எப்சி நிர்வாகத் தலைவரும் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலிலின் கணவருமான டாக்டர் முகம்மட் சாலே இஸ்மாயில் உள்பட 74 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அவர்களின் பிள்ளைகளான இஸ்மிர்,31, இஸ்ரான்,27, இஸ்ஸானா,25, ஆகியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

TAGS: