மலேசியா அமெரிக்காவிடமிருந்து விமானியில்லாத விமானங்களை வாங்குகிறது

அமெரிக்கா, இராணுவத் தரத்திலான 12 ட்ரோன்களை, விமானியில்லா விமானங்களை, மலேசியாவுக்கு விற்கவுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரிம80 மில்லியன் என ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது.

ஆயுதம் கொண்டிராத இந்த வகை ட்ரோன் விமானம் ஸ்கேன்ஈகள் என்று அழைக்கப்படுகின்றது. போயிங்கின் துணை நிறுவனம் இதைத் தயாரிக்கிறது.

இது 20 மணி நேரத்துக்குப் பறக்கக்கூடியது என்றும் போர்க்களங்களில் வேவு பார்க்கவும், மற்ற இடங்களில் கண்காணிப்புப் பணிகளுக்காகவும் பயன்படும் என்றும் த டிபென்ஸ் போஸ்ட் என்னும் அகப்பக்கம் கூறுகிறது.

மலேசியா யுஎஸ்$19 மில்லியனுக்கு(ரிம 79.36 மில்லியன்) 12 ட்ரோன் விமானங்களை வாங்குகிறது. தென் சீனக் கடல் பகுதியில் உள்ள மற்ற நாடுகளும் அவற்றை வாங்குகின்றன.

இந்தோனேசியாவும் பிலிப்பின்சும் தலா எட்டு விமானங்களையும் வியட்நாம் ஆறு விமானங்களையும் வாங்குகின்றன..