ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் இரண்டாம் தேசிய பேராளர் மாநாடு

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட சுமார் 350 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். டிசம்பர் 4-ம் தேதி காலை மணி 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை கோலாலம்பூர் சீன அசம்பெளி மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறும்.

லண்டனிலிருந்து ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி அவர்களின் இணையம் மூலமான நேரடி உரையுடன் துவங்கும் இம்மாநாட்டில் கடந்த வருட ஹிண்ட்ராப் நடவடிக்கைகளின் கண்ணோட்டம், எதிர்கால நடவடிக்கைகளின் அனுகுமுறைகள், 13-வது பொது தேர்தலில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் நிலைப்பாடு போன்ற தலைப்புகளில் ஆக்ககரமான பேராளர்களின் உரைகளும் விவாதங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டிற்கான நிதி அறிக்கையும் முன் மொழியப்பட்டு விவாதங்களுக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடிய ஐந்து சிறந்த போராட்ட வாதிகளை ஹிண்ட்ராப் உச்சமன்ற தேர்வுகுழுவின் பரிந்துரையின் பேரில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இவ்வாண்டிற்கான ஹிண்ட்ராப் மனித உரிமைக் காவலன் ( HINDRAF HUMAN RIGHTS DEFENDER ) என்ற அங்கீகாரமும் வழங்கப்பட்டு இம்மாநாட்டில் கௌரவிக்கப்படுவார்கள்.

தொடர்புக்கு : வி.சம்புலிங்கம், மலேசிய ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர்
தொலைபேசி : 010-277 4096