மலேசியா போகும் பாதையும் சகிப்புணர்வு குறைந்து வரும் நிலையும் கவலையளிப்பதாக முன்னாள் உள்துறை அமைச்சர் சைட் ஹமிட் அல்பார் கூறினார்.
“மலேசியாவுக்கு இது சிரமமிக்க, அபாயகரமான கட்டம். தனித்தனி குழுக்களாக பிரிந்து நிற்கும் போக்கும் சகிப்புணர்வின்மையும் அதிகரித்து வருகிறது.
“இன, சமய, கலாச்சார அடிப்படையில் அமைந்த பேச்சுகள் கவலையளிக்கின்றன.
“எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தவறினால் நாம் இதுவரை கட்டிக்காத்த அத்தனையும் அழிந்து போகும்”, என்றவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.