நேற்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் பற்றி விவாதிக்கப்படவில்லை என்கிறார் நிதி அமைச்சர் லிம் குவான் எங்.
அது பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் கூட்டமல்ல. அமைச்சர்களின் கூட்டம் என்று டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் கூறினார்.
“எனவே, அதில் அரசாங்க விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. நீங்கள் குறிப்பிடுவதுபோல் அமைச்சரவை மாற்றம் குறித்துப் பேசப்படவில்லை”, எனச் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

























