தண்ணீர் கட்டணம் உயருமா? ஆண்டு இறுதிக்குள் தெரியவரும்

எல்லா மாநிலங்களுக்கும் புதிய தண்ணீர் கட்டணம் அறிவிக்கப்படவுள்ளது. ஆண்டு இறுதிக்குள் அந்த அறிவிப்பு வரலாம்.

ஆனால், புதிய கட்டணத்தை அறிவிப்பதற்குமுன் அது அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்படும் என்று நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார்.

“புதிய கட்டணத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பின்னரே அதை அறிவிப்பேன்…..ஆண்டு இறுதிக்குள் அது நடக்கலாம், ஆனாலும் எதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை”, என மோரிப்பில் 2019 அமைதி ஓட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் கூறினார்.

அரசாங்கம் மக்களின் சிரமங்களை அறிந்திருப்பதால் கட்டண உயர்வு மக்களுக்குச் சுமையாக இருக்காது சேவியர் கூறினார்.