இன்று கோலாலும்பூரில் புத்ரா உலக வாணிக மையத்தில், எதிர்க்கட்சிகளான அம்னோவும் பாஸும் அவற்றுக்கிடையில் அரசியல் ஒத்துழைப்புக்கு வழிகோலும் Piagam Muafakat Nasional எனப்படும் தேசிய ஒத்துழைப்புச் சாசனத்தில் கையொப்பமிட்டன.
கையொப்பமிடுவதற்கு முன்பு அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் இரு கட்சிகளும் செய்துகொள்ளும் அரசியல் ஒத்துழைப்பு பற்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வினைக் காண ஆயிரக்கணக்கானவர் புத்ரா உலக வாணிக மையத்தின் மெர்டேகா மண்டபத்துக்கு உள்ளும் புறமும் திரண்டிருந்தனர்.
அம்னோ, பாஸ் தலைவர்கள் தங்கள் உரைகளில், மலாய்-முஸ்லிம் விவகாரங்களுக்காக போராட இரு கட்சிகளுக்குமிடையில் ஒற்றுமை அவசியம் என்பதைக் குறிப்பிட்டனர். அதே வேளை மற்ற இனத்தவர் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்றும் வலியுறுத்தினர். இஸ்லாம் பல்லினச் சமுதாயத்தை ஆதரிப்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் குறிப்பிட்டனர்.