தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அறு-முனைப் போட்டி

நவம்பர் 16-இல் நாடைபெறும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் அறு-முனைப் போட்டியாக அமைகிறது.

பக்கத்தான் ஹரப்பானுக்காக அத்தொகுதியைத் தற்காத்துக்கொள்ளப் போட்டியிடுபவர் தஞ்சோங் பியாய் பெர்சத்துத் தலைவர் கர்மாயின் ஸார்டினி. அவருக்கெதிராக பிஎன் அத்தொகுதியின் முன்னாள் எம்பி, வீ செக் செங்கைக் களமிறக்கியுள்ளது.

கெராக்கான் அதன் தலைமைச் செயலாளர் வெண்டி சுப்ரமணியத்தை வேட்பாளராக நியமித்துள்ளது. பெர்ஜாசாவும் களம் இறங்கியுள்ளது. அதன் வேட்பாளர் அதன் தலைவர் பத்ருல்ஹிஷாம் அப்துல் அசிஸ்.

இவர்கள் தவிர சுயேச்சைகளாக இருவரும் -ஆங் சுவான் லொக், ஃபரிடா அர்யானி அப்துல் கப்பார்- இடைத் தேர்தலில் குதித்துள்ளனர்