சைப்ரஸ் அதிபர் நிக்கோஸ் அனாஸ்டாசியாடெஸ் மலேசியாவிலிருந்து தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோவின் கடப்பிதழ் பறிக்கப்படலாம் என்பதைக் கோடி காட்டியுள்ளார்.
அது குறித்து சைப்ரஸ் மெயில் நாளேடு விவவியதற்கு “ஆமாம்” என்று அவர் பதில் அளித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1எம்டிபி மோசடியுடன் தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டும் ஜோ லோவுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியபோது கடப்பிதழைப் பறிப்பதற்கு முன் ஆழமாக விசாரிக்கப்படும் என்றாரவர்.
“விதிமுறைகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்ட குடியுரிமைகள் பறிக்கப்படும்”, என்றார்.
அதேவேளை இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்றும் அனாஸ்டாசியாஸ் கேட்டுக்கொண்டார்.
4,000 குடியுரிமைகள் கொடுக்கப்பட்டதில் 10, 15 தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம் . அதைப் பெரிதுப்படுத்துவது நாட்டின் பெயரைக் கெடுக்கும் என்றவர் சொன்னார்.