எல்டிடிஇ-தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு நியாயமான விசாரணை கிடைக்காமல் போகலாம்- வழக்குரைஞர்

தமிழீழ விடுதலைப் புலி (எல்டிடிஇ) இயக்கத்துடன் தொடர்புள்ள குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவருக்கும் இதர பதின்மருக்கும் நியாயமான விசாரணை கிடைக்காமல் போகலாம் என்று வழக்குரைஞர்கள் அஞ்சுகின்றனர்.

அவர்களின் வழக்கில் குற்றவியல் நடைமுறை நெறிமுறைகள் (சிபிசி) மற்றும் சாட்சியச் சட்டம் பின்பற்றப்படாது. மாறாக, பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்ட(சோஸ்மா)ம்தான் பின்பற்றப்படும்.

“ஒருவர்மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அங்கே சோஸ்மா- தான் பயன்படுத்தப்படும். அது வழக்கமான குற்றவியல் சட்டத்திலிருந்து மாறுபட்டது”, என்று வழக்குரைஞர் நியு சின் இயு மலேசியாகினியிடம் தெரிவித்தார்.