மவுண்ட் எஸ்கின் சுரங்கப்பாதை ஒரு பண விரய திட்டம் -என்ஜிஓ

மவுண்ட் எஸ்கின் சுரங்கப்பாதை அமைப்பது ஒரு நல்ல திட்டம் அல்ல என்று கூறும் பினாங்கு அரசுசாரா அமைப்பு ஒன்று (என்ஜிஓ) அது ஏன் நல்லதல்ல என்பதற்குப் பல காரணங்களை முன்வைத்துள்ளது.

அது வரிசெலுத்துவோர் பணத்தை விரயமாக்கும் திட்டம் என்று குறிப்பிட்ட பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் மொகிதின் அப்துல் காதர், அதை இரத்துச் செயவதே நல்லது என்றார்.

“அந்தச் சந்திப்பில், காலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும் நேரம் தவிர்த்து, பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து சீராகவே உள்ளது”, என்று மொகிதின் ஓர் அறிக்கையில் கூறினார்.

“அப்படிப்பட்ட நேரங்களில்கூட ஜாலான் பர்மாவுக்கு பத்து நிமிடங்களில் சென்று விடலாம்”, என்றாரவர்.

சுரங்கப்பாதை கட்டப்படுமானால் (அது கட்டப்படும்) குறைந்தது ஈராண்டுக் காலத்துக்கு தீவின் வட பகுதி மக்கள் ஜார்ஜ்டவுன் சென்றுவர ஒரே ஒரு வழிதான் (ஜாலான் தஞ்சோங் தொக்கொங்) இருக்கும் என்பதால் அதில் மிகப் பெரிய போக்குவரது நெரிசல் ஏற்படும் என்பதை மொகிதின் சுட்டிக்காட்டினார்.

“இதை எல்லாம் மாகராட்சி மன்றம் கவனத்தில் கொண்டதா?”, என்றவர் வினவினார்.