அஸ்மின் இன்று பகல் முன்று மணிக்கு கட்சி எம்பிகளைச் சந்திக்கிறாராம்

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கட்சி எம்பிகளைச் சந்திக்கப் போவதாக பரப்பரப்பூடும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி அச்செய்தியை வெளியிட்டிருக்கும் த ஸ்டார் ஆன்லைன் பிற்பகல் மூன்று மணிக்கு அச்சந்திப்பு நடப்பதாக தெரிவித்தது.

“இம்முறை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்திலேயே பகல் மணி 3க்குச் சந்திப்பு நடக்கிறது. பெரும்பாலோர் அதில் கலந்து கொள்வோம்”, என்றந்த வட்டாரம் கூறிற்றாம்.

பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் நேற்றிரவு 20 பிஎன் எம்பிகளை புத்ரா ஜெயாவில் அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் என்ற செய்தி வெளிவந்து கலக்கிக் கொண்டிருக்கும் வேளையில் இப்போது இன்னொரு சந்திப்புப் பற்றி இப்படி ஒரு செய்தி.