பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் இன்று காலை இஸ்தானா நெகராவில் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்- முஸ்டபா பில்லா ஷா-வைச் சென்று கண்டதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடாம் பேசிய அன்வார், “அது ஒரு பொய்யான செய்தி. அதைப் பொருள்படுத்தாதீர்கள்.இன்று காலை இங்குதான் (நாடாளுமன்றத்தில்) இருந்தேன்”, என்றார்.
அவர் பேரரசரைச் சென்று காண முயன்றதுண்டா என்றும் வினவப்பட்டது.
“இல்லை. நான் அவரைச் சந்தித்து மூன்று வாரங்கள் ஆகிறது. அது வழக்கமான ஒரு சந்திப்புத்தான்”, என்றார்.
மேலும் அவர், வதந்திகளைப் பரப்புவது பலவீனமானவர்களின் வேலை, அவர்கள்தான் அவதூறு கூறுவார்கள், பொய்யான செய்திகளை அள்ளி விடுவார்கள் என்றார்.