ஹரப்பான் தேர்தல் அறிக்கையைக் குப்பைக் காகிதமாக நினைக்கக் கூடாது – ரோனி லியு

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையைக் குப்பைக் காகிதமாக நினைத்துவிடக்கூடாது என்பதை தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் அவர்களின் வாக்குகளின் மூலம் உணர்த்தி இருக்கிறார்கள் என டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு கூறினார்.

“தங்கள் வாக்குகளால் கூட்டரசு அரசாங்க அளவில் மாற்றத்தை உண்டுபண்ண முடியாது என்பதை தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் அறிவார்கள். ஆனாலும், தேர்தல் அறிக்கையைக் குப்பைக் காகிதம் போல் நினைத்துவிடக் கூடாது என்பதை நமக்கு உணர்த்த விரும்பினார்கள்”, என்று லியு தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து அவர், ஹரப்பான் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவும் வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கவும் கடுமையாக பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.