சோஸ்மா சட்டத்தின்கீழ்த் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தார், டிஏபி, பிஎஸ்எம், சுவாராம் ஆகியவற்றின் ஆதரவுடன் இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஒன்றுகூடி விசாரணையின்றித் தடுத்துவைக்க வகை செய்யும் சோஸ்மா சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்..
டிஏபி தலைவர்கள், தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம் கிட் சியாங், புக்கிட் குளுகோர் எம்பி ராம்கர்பால் சிங், கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு ஆகியோர் அக்குடும்பத்தாரின் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் ஒரு மகஜரை மக்களவைத் தலைவர் முகம்மட் அரிப் முகம்மட் யூசுப்பிடம் ஒப்படைத்தனர்.
“இந்த மகஜர் சோஸ்மாவை இரத்துச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது…
“இரண்டாவதாக, நடவடிக்கை எடுப்பதற்கு சோஸ்மா போன்ற கொடிய சட்டம் அவசியமில்லை”, என ஒரு குடும்பத்தின் பிரதிநிதியான உமா தேவி கூறினார்.