பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் பெர்சத்து கட்சியும் எதிர்க்கட்சிகளான அம்னோ, பாஸ் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கலாம் என்ற கருத்தை முன்வைத்த ஆராவ் எம்பி-யை அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா சாடினார்.
அது ஷாஹிடானின் தனிப்பட்ட கருத்து என்றும் அக்கருத்தில் அம்னோ-பாஸ் கூட்டணியான முபாகாட் நேசனலுக்கோ பாரிசான் நேசனலுக்கோ உடன்பாடு இல்லை என்றும் அவர் சொன்னார்.
“முபாகாட் நேசனலும் பிஎன்னும் ஆராவ் எம்பி முன்வைத்த
ஒற்றுமை அரசாங்கம் என்ற கருத்தைப் புறந்தள்ளுகின்றன. ஏனென்றால், பொய் சொல்வோரை, ஏமாற்றுவோரை, வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசுவோரை, திறம்படச் செயல்படாடதவர்களை, கொடியவர்களை, இனவாதிகளை, இஸ்லாத்தை எதிர்ப்போரை, சோசலிசவாதிகளை, கம்முனிஸ்டுகளை மக்கள் விரும்புவதில்லை”, என அனுவார் டிவிட் செய்திருந்தார்.