குவாந்தானில் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் கொள்ளையிடும் கும்பல் ஒன்றின் தலைவன் என்று ஐயுறப்படும் ஒருவன் போலீஸ்மீது காரை மோதித் தப்பிச் செல்ல முயன்றான்.
அவனைச் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்ற போலீசார் நேற்றுக் காலை மணி 10க்குக் கைது செய்ததாக குவாந்தான் போலீஸ் தலைவர் ஏசிபி முகம்மட் நூர் யூசுப் அலி கூறினார்.
“அச்சந்தேகப் பேர்வழி போலீசைக் கண்டதும் காரின் வேகத்தைக் கூட்டி போலீஸ் வாகனத்தை மோதி விட்டுத் தப்பிச் செல்ல எத்தனித்தான்.
“போலீஸ் அவனது காரின் பின்பக்க டயரைசு சுட்டு தடுத்து நிறுத்தினர்”.
அச்சம்பவத்தில் ஒரு போலீஸ்காரரும் காயமடைந்தார். அவருக்கு ஆபத்தில்லை, திடமாக உள்ளார் என முகம்மட் நூர் தெரிவித்தார்.
சந்தேகப் பேர்வழியுடன் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். “இருவரும் எம்பிடமின் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது”, என்றவர் சொன்னார்.