அன்வாரும் பொய் கண்டறியும் சோதனைக்கு உட்பட வேண்டும்- பாஸ் தலைவர்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டிய முகம்மட் யூசுப் ராவுத்தர் பொய் கண்டறியும் சோதனைக்கு உடன்பட்டதுபோல் அன்வாரும் உடன்பட வெண்டும் என்கிறார் பாஸ் தலைவர் ஒருவர்.

அன்வார் பொய் கண்டறியும் சோதனை செய்து கொள்வது அவர்மீதான ஐயங்களைப் போக்க உதவும் என்று சிலாங்கூர் பாஸ் இயக்குனர் முகம்மட் ஷாஹிர் கூறினார்.

“அன்வார் அடுத்த பிரதமர் ஆவதற்குக் காத்திருப்பவர். இப்போது ஓர் எதிர்க்கட்சித் தலைவர் அல்ல.

“அன்வார் அவர்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அவர் எட்டாவது பிரதமராவதைத் தடுக்கும் முயற்சி என்று நினப்பாரானால் பொய் கண்டறியும் சோதனைக்கு உடன்படும் துணிச்சல் அவருக்கு வேண்டும்”, என்றாரவர்