ஜோகூர் எம்பி வெளிநாட்டில் இருந்தாலும் வெள்ள நிலவரத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்

ஜோகூர் மந்திரி புசார் டாக்டர் ஸருடின் வெளிநாடு சென்றிருந்தாலும் அம்மாநிலத்தின் வெள்ள நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என அவரது அலுவலகம் இன்று தெரிவித்தது.

ஜோகூரில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ள வேளையில் மந்திரி புசார் எகிப்து, ஜோர்டான் ஆகியவற்றுக்கு அலுவல் பயணம் மேற் கொண்டிருப்பதைப் பலரும் குறை கூறியுள்ளனர். அப்பயணம் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பே திட்டமிடப்பட்டது என்று மந்திரி புசார் அலுவலகம் கூறிற்று.

பயணப்படுவதற்குமுன் ஸருடின் வெள்ளத் துயர்த் துயர்த் துடைப்பு மையங்கள் பலவற்றுக்கு வருகை மேற்கொண்டதாகவும் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளை ஜோகூர் தீ அணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் யாஹ்யா மடிஸுடன் ஆகாயத்திலிருந்து பார்வையிட்டதாகவும் அது கூறியது.