சங்கப் பதிவதிகாரியால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்ட எம்டியுசி அதன் பொது மன்றக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது.
அக்கூட்டம் தொடர்பில் எம்டியுசி தலைமச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் அதன் நிகழ்ச்சி நிரலில் நடப்பு நிதிச் செயலாளரின் பதவி நீக்கம் அவருக்குப் பதில் புதியவரைத் தேர்ந்தெடுத்தல் முதலியவையும் இடம்பெற்றுள்ளது.
எம்டியுசி வலைத்தளத்தில் அதன் நடப்பு நிதிச் செயலாளர் இங் பெங் ஹோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங் சிஐஎம்பி வங்கி பொதுச் செயலாளரும் ஆவார்.
ஞாயிற்றுக்கிழமைக் கூட்டம் சுபாங் ஜெயா விஸ்மா எம்டியுசி-இல் நடக்கிறது. அதில் பேராளர் கூட்டம் பற்றியும் விவாதிக்கப்படும். பேராளர் கூட்டம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கூட்டமாகும். அதில்தான் எம்டியுசி பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.