ஜாவி சர்ச்சை: டொங் ஜியாவ் சொங் மற்றும் மசீச-வுடன் கலந்துரையாட தயார்- பாஸ் அறிவிப்பு

தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்துப் பயன்படுத்தப்படுவதன் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குத் தீர்வுகாண உதவுமானால் பாஸ் கட்சி சீனக் கல்வி அமைப்பான டொங் ஜியாவ் சொங் , மசீச உள்பட , எந்தத் தரப்புடனும் கலந்துரையாட தயார் என அதன் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.

பொதுநலன் தொடர்பான எந்த விவகாரமானாலும் எந்தத் தரப்புடனும் விவாதிக்கவோ கலந்துரையாடவோ பாஸ் எப்போதும் ஆயத்தமாக உள்ளது என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

ஜாவி எழுத்து தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வுகாண எந்தத் தரப்புடனும் கலந்துரையாட தயார் என்று டொங் ஜியாவ் சொங் அறிவித்திருப்பதையும் தகியுடின் வரவேற்றார்.

“அப்படிப்பட்ட கலந்துரையாடல் ஐயப்பாடுகளை நீக்கி பல்லின நாட்டில் நல்லிணக்கமும் மற்றும் வளப்பமும் பெருக வழிவகுக்கும்”, என்றார்.