டிஏபி கம்முனிஸ்டா? சிரிப்புத்தான் வருது- முன்னாள் சிபிஎம் தலைவர் அப்துல்லா

மலாயா கம்முனிஸ்டுக் கட்சி முன்னாள் தலைவர்களில் ஒருவர், டிஏபி-யைக் கம்முனிசத்துடன் இணைத்துப் பேசுவதைக் கேட்க வேடிக்கையாக உள்ளது என்றார்.

மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் சிபிஎம் தலைவர் அப்துல்லா சி.டி., தொடங்கிய காலத்திலிருந்தே டிஏபி கம்முனிஸ்டு- எதிர்ப்புக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்த கட்சி என்றார்.

1965-இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததை அடுத்து உருவானது டிஏபி. அது சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியிலிருந்து(பிஏபி) பிரிந்து வந்த கட்சி.

பிஏபி நிறுவனர் காலஞ்சென்ற லீ குவான் இயுகூட கடுமையான கம்முனிஸ்டு எதிர்ப்பாளர் என்றாரவர்.