தற்காப்பு அமைச்சர் மகன்மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு

தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபுவின் மகன் அஹமட் சைபுல் இஸ்லாம்மீது இன்று கோலாலும்பூர் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

வழக்கைக் காண்பதற்கு நீதிமன்றத்தில் நிறைய பேர் கூடி இருந்தனர்.

மெஜிஸ்ட்ரேட் முகம்மட் அய்ஸாட் அப்துல் ரஹிம், அரசாங்கத் தரப்பில் அஹ்மட் சைபுல் போதைப் பொருள் உட்கொண்டிருந்தார் என்பதற்குப் போதுமான சான்றுகள் காண்பிக்கப்பட்டதாகக் கூறினார்.

“அவற்றை வைத்துப் பார்க்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்மீது வழக்கு தொடுக்க போதுமான காரணங்கள் இருப்பது தெளிவு. எனவே, குற்றம்சாட்டப்படவர் எதிர்வாதம் செய்ய தயாராகும்படி உத்தரவிடுகிறேன்”, என்றார்.

வழக்கு பிப்ரவரி 13-இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.