கிமானிஸில் நஜிப்புக்கு நல்ல வரவேற்பு : எப்படி என்று வாரிசான் குழம்புகிறது

கிமானிஸ் இடைத் தேர்தலில் வாரிசான் கட்சி வேட்பாளர் கரிம் பூஜாங்குக்கு, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எத்தனையோ பிரச்னைகளுக்கிடையிலும் இன்னமும் மக்களிடையே பிரபலமாக விளங்குவது எப்படி என்று ஆச்சரியப்படுகிறார்.

“கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளை எதிர்நோக்கும் ஒருவர் இங்கு வருகிறார், மக்கள் இன்னமும் அவரை ‘போஸ்’ என்றுதான் அழைக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லையே?”, என்றவர் கூறினார்.

கிமானிஸில் நஜிப்புக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் வினவியதற்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.