பிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் குறைக்கப்படும், 2058 வரை உயர்வும் இல்லை!

பிளஸ் மலேசியா பெர்கட்டின் (Plus Malaysia Bhd) கீழ்ழுள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கவரிக் கட்டணம் பிப்ரவரி 1 முதல் 18 சதவீதம் மலிவாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், 2058 ஆம் ஆண்டு வரை அதில் அதிகரிப்பு இருக்காது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இன்று ஒரு அறிக்கையில், அரசாங்கம் இனி பிளஸுக்கு ஈடுசெய்ய வேண்டியதில்லை என்று கூறினார். “ஒப்பந்த காலத்தில் (இழப்பீடு செலுத்தாமல்) அரசாங்கம் RM42 பில்லியனை மிச்சப்படுத்தும்” என்றும் கூறிப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தக பரிமாற்றம் என்னவென்றால், நெடுஞ்சாலைகளை இயக்குவதற்கான பிளஸுடனான ஒப்பந்தம் மேலும் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும். இந்த ஒப்பந்தம் முதலில் 2038 இல் காலாவதியாகும், என்று தெரிகிறது.

பிளஸ் என்பது ஒரு தனியார் நிறுவனமாகும், இது கசானா நேஷனல் பெர்கட் (Khazanah Nasional Bhd) (51 சதவீதம்) மற்றும் ஊழியர் சேமநல நிதி (Employees Provident Fund) (49 சதவீதம்) ஆகியவற்றிற்கு சொந்தமானது.

புதன்கிழமை, தனியார் நிறுவனங்களின் பல கையகப்படுத்தும் ஏலங்களை நிராகரித்த பின்பு, அமைச்சரவை பிளஸுக்கு சுங்கவரிக் கட்டணங்களைக் குறைத்து ஒப்பந்தத்தை நீட்டிக்க உத்தரவிட்டது. இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றும் நோக்கில், அனைத்து தனியார் நிறுவனங்களும் சுங்கவரிக் கட்டணங்களை குறைக்க முன்வந்தன.

சுங்கவரி கட்டணங்களை நீக்குவதற்கான நோக்கத்துடன் நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்வது, 2018 தேர்தலுக்கான பக்காத்தான் ஹரப்பனின் அறிக்கையில் ஒரு மைல்கல்லாக இருந்தது.

இப்போது கூட்டணி ஆட்சியில் இருப்பதால், கட்டணங்களை ஒழிப்பதற்கு அரசாங்கத்தால் முடியாது என்பது இப்போது தெளிவாகத் தெரிந்ததால், படிப்படியாக கட்டணங்களைக் குறைக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டது.