அம்பிகா: துணிச்சலானவர்கள் எங்கே போய்விட்டார்கள்?

முன்னாள் தேசிய மனித உரிமைகள் சங்கத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், பக்காத்தான் ஹரப்பானில் உள்ள சிலரை இனி அடையாளம் தெரியவில்லை என்கிறார். அவர்கள் பாக்காத்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாக மாறுவதற்கு முன்பு மிகவும் துணிச்சலானவர்களாகவும் அச்சமின்றியும் இருந்தனர் என்றார்.

“கடந்த காலங்களில் செய்ததைவிட மாறுபட்டு ஒன்றை செய்ய தைரியம் தேவை. அதனால்தான் நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தோம். எதிர்க்கட்சியாக இருந்தபோது, அவர்கள் உண்மையிலேயே மிகவும் தைரியமாக இருந்தார்கள். உதாரணமாக பெர்சே மற்றும் மற்றவற்றிலும் கூட, அவர்களுக்கு எந்த பயமும் இருந்ததில்லை” என்றார்.