நேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் – பி.என். வெற்றியைக் கொண்டாடுகிறது!

இரவு 8.20 மணி – கிமானிஸ் இடைத்தேர்தலில் வென்றது குறித்து பி.என். தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டடுகின்றனர்.

இரவு 7.25 மணி – அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு – கிமனிஸ் இடைத்தேர்தலில் பி.என் வெற்றி பெற்றது. கிமானிஸ் இடைத்தேர்தல் பி.என். இன் மொஹமட் அலமினுக்கு ஆதரவாக அமைகிறது என்றே தெரிகிறது.

அவர் தனது எதிராளியான வாரிசனில் கரீம் புஜாங்கை அதிகாரப்பூர்வமற்ற வித்தியாச எண்ணிக்கையின் அடிப்படையில் தோற்கடித்தார்.

மொஹமட் அலமின் 11,992 வாக்குகளைப் பெற்றுள்ளார், கரீம் 10,200 வாக்குகளைப் பெற்றுள்ளார் கரீம்.

பி.என். தேர்தல் அறையில் அம்னோ தலைவர்கள் ஆகியோருடன் கொண்டாட்டங்கள் வெடித்தன.

மாலை 6.50 மணி – ஆய்வாளர் ஒருவரின் கூற்றுபடி, கிமனிஸ் தேர்தலில் பி.என். வெற்றி பெற்றால், அது தேசிய அளவில் நிலவிவரும் அதிருப்தியினால் மட்டுமே என்கிறார்.

“பக்காத்தான் ஹரப்பன் அரசாங்கத்தின் செயல்திறன் மீதான அதிருப்தி சபாவிற்கும் பரவியுள்ளது என்பதை இது காட்டுகிறது” என்று யுனிவர்சிட்டி மலாயா சமூக அரசியல் ஆய்வாளர் அவாங் அஸ்மான் அவாங் பவி கூறுகிறார்.

பொருளாதார பிரச்சினைகளை அரசாங்கம் கையாளும் விதத்தில் மக்கள் திருப்தியடையவில்லை என்றும் அவர் கூறினார்.

ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் Sabah Temporary Pass (PSS) முயற்சியை செயல்படுத்துவதில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று அவாங் கூறினார்.

முன்னதாக, பல்வேறான உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களும் கிமானிஸ் தேர்தலில் முடிவின் காரணியாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கண்டறிந்தன.

மாலை 6.44 மணி – அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கையின் அடிப்படையில், பி.என். இப்போது வாரிசனை விட ஒரு பெரிய முன்னிலையில் உள்ளது (வாரிசனின் 6,820 வாக்குகள்; பி.என் 8,212 வாக்குகள்) மேலும் கிமானிஸ் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பிலும் உள்ளது.

மாலை 6.06 மணி – அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கையின் அடிப்படையில், பி.என்., வாரிசனை விட முன்னிலை வகிக்கிறது.

இத்தொகுதியில் மொத்தம் 29,664 தகுதியான வாக்காளர்கள் உள்ளனர்.

இன்றைய இடைத்தேர்தலில் தகுதியான வாக்காளர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கிமானிஸ் இடைத்தேர்தல் குறித்த சில விவரங்கள்:

இது 2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு 10வது இடைத்தேர்தல் ஆகும். இது சபாவுக்கான இரண்டாவது இடைத்தேர்தல் ஆகும். கடந்த ஆண்டு மே 11 அன்று சபா சண்டகனில் நடந்த முதல் இடைத்தேர்தலில் டி.ஏ.பி. வென்றது.

இன்றுவரை, பக்காத்தான் ஹரப்பன் ஐந்து இடைத்தேர்தல்களில் (சுங்கை காண்டிஸ், செரி செத்தியா, பாலகோங், போர்ட் டிக்சன், சண்டகன்) வெற்றி பெற்றுள்ளது, பாரிசான் நேசனல் நான்கு இடங்களில் (கேமரன் ஹைலேண்ட்ஸ், செமெனீ, ரன்தாவ், தஞ்ஜோங் பியா) வென்றது. இந்த இடைத்தேர்தலில் ஹராப்பனின் கூட்டணியான வாரீசன் (Warisan) ஆளும் கூட்டணியை பிரதிநிதிக்கின்றது.

கிமானிஸ் இடைத்தேர்தல் சபா பூமிபுத்ரா சமூகத்தின் தெளிவான அளவீடாக இருக்கும். இது சபாவில் நடந்த முதல் இடைத்தேர்தல் அல்ல. சண்டகனில் முந்தைய இடைத்தேர்தல் ஒரு சீன பெரும்பான்மைத் தொகுதியாகும்.

கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் பெரும்பான்மையான மக்கள் 61.93 சதவீதம் முஸ்லிம் பூமிபுத்ராவை கொண்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் புருனை மலாய், பிசாயா மற்றும் பஜாவ் சமூகங்களை உள்ளடக்கியவர்கள்.

இரண்டாவது பெரிய குழு முஸ்லிம் அல்லாத பூமிபுத்ரா, சுமார் 31.92 சதவிகிதம் ஆகும், அவர்களில் பெரும்பாலோர் கடாசன்-டுசுன் மற்றும் முருத் இனத்தை சார்ந்தவர்கள். சீனர்கள் 3.66 சதவீமும் இதர இனத்தவர்கள் 2.49 சதவீதமாக அடங்கியுள்ளனர்.