பாரிசான் விமர்சனத்திற்கு லிம் பதிலடி!

“பாரிசான், பிளஸ் சுங்கச்சாவடி கட்டணத்தைப் பற்றி விமர்சிக்கிறது, ஆனால் ஆட்சியில் இருந்த பொழுது அதைக் குறைக்க அவர்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை” என்கிறார் லிம் குவான் எங்.

சமீபத்திய சுங்கச்சாவடி கட்டணக் குறைப்பு கொள்கை குறித்த பாரிசான் விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் லிம் குவான் எங் பதிலளித்துள்ளார். அவர்கள் “வரலாற்றை மறந்துவிட்டார்கள்”. இத்தகைய நடவடிக்கையை முந்தைய பி.என். அரசாங்கம் ஒருபோதும் செயல்படுத்தவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளன, ஆனால் ஒருபோதும் கட்டணம் குறைக்கப்பட்டதில்லை” என்றார் லிம்.

“அவர்களின் காலத்தில் சுங்கச்சாவடிக கட்டணத்தில் மாற்றங்களே இல்லாமல் அதிகரிக்கப்பட்டுதான் இருந்தன. ஆனால் இந்த முறை ஒப்பந்த காலத்தில் கட்டணத்தை 18 சதவிகிதம் குறைத்துள்ளோம்”. பாகானில் உள்ள 660 தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு RM100 காசோலைகளை வழங்கிய பின்னர், செபராங் ஜெயாவில் செய்தியாளர்களிடம் லிம் இதனை கூறினார்.

இதற்கு உதாரணமாக முதல் பினாங்கு பாலத்தின் சுங்கச்சாவடிக கட்டணத்தை லிம் மேற்கோள் காட்டினார்.