BERSATU, UMNO கூட்டனி சாத்தியமாகுமா?

BERSATU, UMNO கூட்டனி சாத்தியமாகுமா?

BERSATU உடனான ஒத்துழைப்பு பிரச்சினையை அம்னோ நாளை முடிவுக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BERSATU உடனான ஒத்துழைப்பு மற்றும் ஒரு கூட்டனி அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்மொழிவு ஆகியவற்றை அம்னோ நாளை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஷயங்களை பற்றி விவாதிக்க இரண்டு கூட்டங்கள் நடைபெரும் என்று புரிகிறது.

“Majlis Tertinggi (MT)/ அம்னோ உச்ச மன்றம் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால், ஒத்துழைப்பு நனவாகும். நாளை காலை அரசியல் குழு கூட்டம் நடைபெரும், பிற்பகலில் அம்னோ MT இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அம்னோ உள் வட்டாரம் இன்று தெரிவித்துள்ளது.

BERSATU, அம்னோ மற்றும் PAS சம்பந்தப்பட்ட ஒரு கூட்டணி அரசாங்கத்தைப் பற்றிய ஊகங்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் அம்னோ MT உறுப்பினர் லோக்மான் நூர் ஆடம் அதை வெளிப்படுத்தியதில் இருந்து தொடங்கியது.

பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவுடன் ஒத்துழைக்கப் போவதாகக் கூறிய தனது சொந்தத் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியைமுன்னதாகத் தாக்கிப்பேசினார் லோக்மான்.

“எங்களுக்கு ஒரு பலவீனமான, அடையாளம் இல்லாதத் தலைவர் இருப்பதை எண்ணி நான் மிகவும் சங்கடப்படுகிறேன்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அம்னோ தேசிய சட்டமன்றக் குழுவின் கூட்டத்தின் போது ஜாஹித் பேசியதாகக் கூறப்படும் மூன்று நிமிட 18 வினாடி ஆடியோ பதிவு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

“தேசிய கூட்டணி கோட்பாடுக்கிணங்க, அம்னோ, PAS-சை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அம்னோ தடைசெய்யப்படாமலும், “பின்னால் தங்கிவிடாமலும்” காப்பாற்றப்படும்” என்று ஆடியோ மேற்கோள் கூறுகிறது.

அம்னோவின் துணைத் தலைவர் மொஹமட் ஹசன் நேற்று ஒரு அறிக்கையில், அம்னோவுக்கான அழைப்பைப் பற்றி முதலில் கலந்து பேசப்பட வேண்டும் என்று கூறினார்.

ஒத்துழைப்பின் நோக்கம், இனம், மதம் மற்றும் கட்சி ஆகியவற்றின் நலனுக்கா அல்லது வேறு காரணங்களுக்கா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

லோக்மேன் போன்ற “முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்” அவர்களின் கூட்டனியை சார்ந்தவர்கள், இந்த திட்டத்தை ஏற்கவில்லை.

எவ்வாறாயினும், நிலையற்ற பக்காத்தான் ஹரப்பனின் அரசை எதிர்க்கும் கட்சியின் தலைவர், நாட்டின் அரசியல் நலன்களுக்காக ஜாஹிட்டின் கூட்டணியை ஆதரிக்கின்றார்.