நாட்டின் கொரோனா வைரஸ் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது
கொரோனா வைரஸ் (2019-nCoV) – மேலும் இரண்டு வழக்குகளை மலேசியா பதிவு செய்துள்ளது – ஒருவர் மலேசியர் மற்றொருவர் சீனாவின் வுஹானில் இருந்து வந்த ஒரு சுற்றுலா பயணி.
இதனால், நாட்டின் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மத், பிப்¢ரவரி 3 ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின்னர் வைரஸுக்கு பரிசோதிக்கப்பட்ட 41 வயதான மலேசிய நபரின் தங்கை தான் இப்போது பாதிப்புகுள்ளாகியிருக்கும் மலேசியர் என்று கூறினார்.
சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக ஜனவரி 23 ஆம் தேதி தனது மூத்த சகோதர் சுங்கை பெட்டானிக்குத் வந்த போது அந்தப் பெண் தனது மூத்த சகோதரருடன் “நேரடி தொடர்பில்” இருந்துள்ளார்.
ஒன்பது நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி, அவருக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது.
பிப்ரவரி 4 ஆம் தேதி, அவர் ஒரு இருமல் ஏற்பட்டது.
பின்னர் அந்தப் பெண் ஒரு தனியார் கிளினிக்கிலிருந்து மருத்துவ சிகிச்சை பெற்றார். கிளினிக் எங்குள்ளது அல்லது எப்போது அதைப் பார்வையிட்டார் என்று அமைச்சர் குறிப்பிடவில்லை.
அவரது சகோதரர் 2019-nCoVக்கு சோதனை செய்த பிறகு, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அந்த பெண்மணியைக் கண்டுபிடித்து சோதனை செய்தனர். அவர் (பிப்ரவரி 5) வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நேற்று தெரிய வந்துள்ளது.
கெடாவின் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அவர் தற்போது ஒரு சீரான நிலையில் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், வைரஸ் பாதிப்பின் மையப்பகுதியான சீனாவின் வுஹானைச் சேர்ந்த 38 வயதான பெண் சுற்றுலாப் பயணி – 2019-nCoV க்கு பாதிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 25 ஆம் தேதி, அவர் தனது தாய் மற்றும் மூன்று நண்பர்களுடன் மலேசியா வந்தார். இந்த குழு கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பல சுற்றுலா தளங்களை பார்வையிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
பிப்ரவரி 1 ஆம் தேதி, மருத்துவமனை கோலாலம்பூரில் காய்ச்சலுக்கு மருத்துவ சிகிச்சை கோரியுள்ளார்.
“அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் அவரை வீட்டிற்கு செல்ல அனுமதித்து, அவருக்கு சில மருந்துகளையும் வீட்டு மதிப்பீட்டு கருவியையும் கொடுத்துள்ளார்,” என்று ஒரு அறிக்கையிலிருந்து படித்தபோது சுல்கிப்ளி கூறினார்.
சுற்றுலாப்பயணியையும் குழுவையும் தங்களைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5 ம் தேதி, ஒரு அதிகாரப்பூர்வமாக பரிசோதனைக்குப் பின்னர், அவர் வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. உடனே கோலாலம்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அவர் தற்போது தனிமையில் கண்கானிக்கப்படுவதாகவிம் சீரான நிலையில் உள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.