நாள் 2: சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு அழுத்தம் கொடுத்தார் ரோஸ்மா

Picture courtesy Bernama Infographis

நாள் 2: சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு அழுத்தம் கொடுத்தார் ரோஸ்மா

ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கு| முன்னாள் கல்வி அமைச்சர் மாஹ்ட்சீர் காலித் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று சரவாக் பள்ளிகளுக்கான சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் அவரது உதவியாளர் ரிசால் மன்சோர் ஆகியோரிடமிருந்து இந்த அழுத்தம் வந்தது என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ரோஸ்மா செல்வாக்கு மிக்கவர், அதிகாரம் கொண்டவர் என்பதால் இந்த அறிவுறுத்தலை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்று காலித் சாட்சியம் அளித்தார்.