தைப்பூசம்: வுஹான் வைரஸைக் கையாள செலயாங் மருத்துவமனை தயாராக உள்ளது

தைப்பூசம்: வுஹான் வைரஸைக் கையாள செலயாங் மருத்துவமனை தயாராக உள்ளது

கொரோனா வைரஸ் | இந்த சனிக்கிழமை (பிப்ரவரி 8) தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கான கொரோனா வைரஸ் (2019-nCoV) மருத்துவ செயல்பாட்டு மையமாக செலயாங் மருத்துவமனை நியமிக்கப்பட்டுள்ளது.

இது பத்துமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலுக்கு மிக அருகில் உள்ள பொது மருத்துவமனையாகும். இங்கு பல இந்து பக்தர்கள் தைப்பூச மத விழாவிற்கு வருவார்கள். மூன்று நாட்கள் கொண்டாட்டங்களில் கடந்த ஆண்டு சுமார் 1.6 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர்.

கூகிள் வரைபடத்தின்படி, இரு இடங்களுக்கும் இடையிலான தூரம் 12.5 கி.மீ. ஆகும்.

சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மத் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், எந்தவொரு நிகழ்விற்கும் மருத்துவமனை தயாராயிருக்கிறது என்று கூறினார்.

“மருத்துவ நடவடிக்கை மையம் செலயாங் மருத்துவமனையால் ஒருங்கிணைக்கப்படும். மேலும் இது சம்பவங்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் உதவிபுரிதல் போன்ற நோக்கம் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எந்தவொரு சம்பவங்களையும் சமாளிக்க மருத்துவமனை தயாராக உள்ளது” என்று அவர் புத்ராஜெயாவில் கூறினார்.

இதற்கிடையில், உடல்நிலை சரியில்லாதவர்கள் வெளி தைப்பூச கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.

“கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் முக முகமூடியை அணியுங்கள்” என்று அவர் கூறினார்.

பத்துமலைக்கு செல்லத் திட்டமிட்டுள்ள பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுமாறு கேட்டுக்கொண்டார். அல்லது கை சானிடிசர் / hand sanitiser பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.