கொரோனா வைரஸ் பாதிப்பு – சீனாவுடன் ஒத்துழைக்கும் மலேசியா, விஸ்மா புத்ரா வலியுறுத்து
கொரோனா வைரஸ் பாதிப்பு முழுவதும் மலேசியா சீனாவுடன் ஒற்றுமையுடன் நிற்கும் என்று விஸ்மா புத்ரா இன்று வலியுறுத்தியுள்ளது.
“மலேசியா தொடர்ந்து சீன அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் கை கொடுக்கும்”.
“மலேசியா தற்போதைய தொற்றுநோயை சமாளிக்கும் திறன் பெற்று, தயார்நிலையில், நம்பிக்கையையும் கொண்டுள்ளது”.
“இரு வெளியுறவு அமைச்சர்களுக்கிடையேயான தொலைபேசி அழைப்பின் போது இவ்வுணர்வு பகிரப்பட்டது” என்று இன்று ஒரு அறிக்கையில் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
விஸ்மா புத்ரா தனது இதர தூதரக ஊழியர்களை சீனாவிலிருந்து திருப்பி கொண்டுவருவது தொடர்பான செய்தி அறிக்கைகளை தெளிவுபடுத்தியது. இந்த நடவடிக்கை மலேசிய ஊழியர்களின் நோய்த்தொற்றை குறைப்பதற்காக செய்யப்பட்டது என்றும் பெய்ஜிங்குடன் கலந்தாலோசித்து இது செய்யப்பட்டது என்றும் அது வலியுறுத்தியது.
மற்ற நாடுகளைப் போலல்லாமல், மலேசியா, தனது எல்லைகளை சீன குடிமக்களுக்குத் திறந்து வைத்திருக்கிறது (கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெய்ஜிங்கால் ஏற்கனவே பூட்டப்பட்டிருக்கும் மாகாணங்களைத் தவிர).
“எந்தவொரு சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், சீனாவில் மலேசிய தூதரகப் பணிகள் மலேசியர்களுக்கு தூதரக உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடரும். மேலும் சின நாட்டின் அதிகாரிகளுடன் அவர்களின் நெருக்கமான ஒத்துழைப்பும் தொடரும்” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.