கொரோனா வைரஸ்: 81 புதிய இறப்புகளை ஹூபே பதிவு செய்கிறது
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் ஹூபே மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 699-ஆக உயர்ந்துள்ளது என்று அதன் சுகாதார ஆணையம் இன்று தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிப்பு மையமான ஹூபேயில் 2,841-க்கும் மேற்பட்ட பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது மொத்தம் 24,953 பதிவுகளாக உயர்ந்துளது. நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 34,546 ஆகும்.
கொரோனா கிருமியால் சீனாவில் 86 பேர் கொல்லப்பட்டதாக தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அந்த நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 34,546 ஆகும்.
சமீபத்திய இறப்புகள், ஹூபேயில் 81-ம் பிற பிராந்தியங்களில் 5-ம், என இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக உள்ளது.
உலகளவில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 725 ஆகவும், மற்றும் 35,000-கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சமீபத்திய இறப்புகளில் பெரும்பாலானவை தலைநகரான ஹூபேயில் உள்ள வுஹானில் ஏற்பட்டுள்ளன, அங்கு வைரஸ் தோன்றியதாக நம்பப்படுகிறது.
- ராய்ட்டர்ஸ்