சுருக்கமாக, நேற்றய முக்கிய தலைப்புகள் இங்கே.
BERSATU – UMNO/பெர்சத்து மற்றும் அம்னோ ஒத்துழைப்பு கூட்டணி என்பது வெறும் வதந்தியே. அம்னோ கட்சிக்கும் BERSATU-க்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான கூற்றுக்களை அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நிராகரித்தார், இவை வெறும் வதந்திகள் என்றும், இந்த விஷயம் நேற்றிரவு நடந்த அம்னோ உச்ச மன்ற கூட்டத்தில் கூட விவாதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
PAS உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உச்ச மன்ற உறுப்பினர் லோக்மன் ஆடாமை பதவி நீக்கம் செய்யவும் அம்னோவின் உச்ச மன்றம் தீர்மானித்துள்ளது.
டிசம்பர் 30 ஆம் தேதி கொரோனா வைரஸ் (2019-nCoV) பரவல் குறித்து எச்சரிக்கை விடுக்க முயன்றதற்காக சீன காவல்துறையினரால் கண்டிக்கப்பட்ட சீன மருத்துவர் லி வென் லியாங், 34, இந்த நோயால் இறந்தார்.
சபா தனது பயணக் கட்டுப்பாடுகளை சீனாவிற்கு சமீப பயண செய்த அனைத்து குடியிருப்பாளர் அல்லாதவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் சிங்கப்பூர் தனது எச்சரிக்கை அளவை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.
எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முஹம்மது ரித்துவான் அப்துல்லாவை நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், அவர் இருக்கும் இடத்தை அறிந்தாலும் கைது செய்ய போலீசார் தவறியதை குறித்து முன்னாள் நீதிபதி மாஹ் வெங் குவாய் அதிருப்தி தெரிவித்தார்.
Khazanah Research Institute/கசானா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச காலை உணவை வழங்குவது ஊட்டச்சத்துக்கு அப்பாற்பட்ட அதிக நன்மையை வளங்கும் என்று கூறியுள்ளது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச காலை உணவை வழங்குவதன் மூலம் சிறந்த ஒருங்கிணைப்பு முறையையும் மற்றும் “பள்ளி உணவு பெறும் வெட்கத்தை” தவிர்க்கவும் முடியும் என்று அது கூறியுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களிடம் இருந்து “வழக்கமான” பதில் ஏன் வருவதில்லை என்று வல்லுநர்கள் விளக்குகிறார்கள். வன்கொடுமைக்கு ஆளானவர்கள், அவர்களை கொடுமை செய்தவருடன் நல்லுறவைப் பேணுவதற்கு கூட முயற்சி செய்யகிறார்கள்.
கேமரன் மலையில் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்துள்ள காய்கறி விவசாயிகளுக்கு எதிராக வெளியேற்ற அறிவிப்புகளை அமல்படுத்துவதை ஒத்திவைக்க பகாங் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் நடவு மற்றும் அறுவடைக்கு இன்னும் ஒரு சுழற்சிக்கு அவகாசம் அளித்துள்ளது.