அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி விலகுமாறு டாக்டர் மகாதீர் அறிவுறுத்து

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி விலகுமாறு டாக்டர் மகாதீர் அறிவுறுத்துகிறார்

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வேளையில் இருக்கிறார். இதனிடயே பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவு குறித்து மலேசியாவின் விமர்சனத்தை மீண்டும் உறுதி படுத்தியுள்ளார்.

அமெரிக்க ஆதரவு சமாதானத் திட்டத்தைத் பாலஸ்தீனியர்கள் மற்றும் அவர்களது கூட்டணிகளும் நிராகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து டிரம்ப்பிற்கு அவரது ஆலோசனை என்ன என்று கேட்ட போது, மகாதீர், “ராஜினாமா செய்யுங்கள்” என்றார்.

“அமெரிக்கர்கள் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். டிரம்ப், தேர்தல்களில் வெற்றிபெற வெளிநாட்டு அழுத்தத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறார், தனது பங்கையும் கொள்கையயும் கெடுக்கிறார்” என்று மகாதீர் கூறினார். பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நிலத்திற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவைக் அவர் குறிப்பிடுகிறார்.