பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும், டிரம்பின் சமாதான திட்டம்

பிரதமர்: பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும், டிரம்பின் சமாதான திட்டம்

பாலஸ்தீனத்துடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருதலைப்பட்ச ஒப்பந்தமாக ஏற்றுக்கொண்ட பாலஸ்தீன சமாதான உடன்படிக்கைக்கு மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது அழைப்பு விடுத்தார்.

இன்று காலை தொடங்கிய அல்-குத்ஸிற்கான மூன்றாவது பாராளுமன்ற லீக்/Persidangan Liga Ahli Parlimen Untuk Al-Quds (LP4Q) மாநாட்டில் பேசிய மகாதீர், இந்த திட்டம் “பாலஸ்தீனத்திற்கு அமைதி அல்லது நீதியைக் கொண்டுவருவதற்கான எல்லா முயற்சியையும் அழித்துவிடும். மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை புறக்கணித்து, சக்திவாய்ந்த ஊடுருவல்களை மட்டுமே அங்கீகரிக்கும்” என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமாதான திட்டம் ஜன. 28ல் அறிவிக்கப்பட்டது. இது 1948 முதல் ஏழு தசாப்தங்களாக இஸ்ரேல் கோரிக்கொண்டிருப்பதைக் கொடுக்கும். அதில், ஜெருசலேம் மற்றும் இஸ்ரேல் மக்கள் ஆக்கிரமித்து குடியேற்றங்கள் கட்டிய அனைத்து நிலங்களும் அடங்கும்.

“இந்த திட்டம் பாலஸ்தீனுக்கு அரசுரிமையை வழங்காது. மாறாக, அது மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு நிறவெறி பாணி (apartheid) குடியேற்றங்களை விரிவுபடுத்தும்” என்று அவர் ஒரு மாநாட்டில் தெரிவித்தார்.

டாக்டர் மகாதீர் பின்னர் பாலஸ்தீனத்தில் குடியேற்றங்களை இரண்டாம் உலகப் போரின்போது போலந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவின் சில பகுதிகளை ஜெர்மன் நாஜியின் ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டார்.

“இந்த ‘அமைதி திட்டம் மோசமானது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் பொருட்படுத்தாமலே இது ஜெருசலேமை இஸ்ரேலுக்கு ஒப்படைக்கவுள்ளது,” என்று அவர் கூறினார்.

“மலேசியா இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் மிகவும் நியாயமற்றது என்றும் கருதுகிறது. ஏழு தசாப்தங்களுக்குப் பிறகும், இப்படிப்பட்ட “ஒருதலைப்பட்ச தீர்வை மட்டுமே கொண்டுவர முடியும் என்பது ஏமாற்றமளிக்கிறது. பாலஸ்தீனியர்கள் இன்னும் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்”, என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டம் அங்கு மேலும் மோதல்களை உருவாக்கும் என்றும் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்றும் அவர் முடித்தார்.