தைப்பூசக் கொண்டாட்டத் தளத்தில் நித்யானந்தா பந்தல்
நித்தியானந்த சுவாமி குழு உறுப்பினர்கள் அமைத்த பந்தலில் பல பினாங்கு டி.ஏ.பி. தலைவர்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்த வீடியோ பதிவு வாட்ஸ்அப் வழியாக பரவியுள்ளது.
வீடியோவில் காணப்பட்ட பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி பந்தலுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.
தொடர்பு கொண்டபோது, அவர் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியையும் செய்யவில்லை என்று மறுத்த சதிஸ், சம்பவம் நடந்த நேரத்தில் எந்தவிதமான உடல் ரீதி தொடர்பும் இல்லை என்று கூறினார். ஆனால் சாதாரண பதில் வாய் வாக்குவாதம் மட்டுமே செய்ததாக கூறினார்.
“ஆம், குற்றவாளியான நித்யானந்தாவின் புகைப்படத்தை, சிவனின் (இறைவன்) அவதாரமாக முன்வைக்கும் ஒரு வழிபாட்டு குழுவினரை நாங்கள் எதிர்க்கொண்டோம்,” என்று அவர் கூறினார்.
தான் கோயிலுக்கு வெளியே நடந்து வந்தபோது, பலர் அப்பந்தல் குறித்து புகார் தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.
அந்த குழுவிற்கு எதிராக செயல்படுமாறு காவல்துறையினரை வலியுறுத்தி சதீஸ் ஒரு கட்டுரை எழுதினார். .
இந்த விவகாரம் குறித்த புகாரையும் அவர் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்தார்.
பல இளைஞர்கள் இந்த வழிபாட்டில் சிக்கியுள்ளதாக சதீஸ் கூறினார்.
இந்தியாவில் காவல்துறையினர் நித்யானந்தாவை கடத்தல், வயது குறைந்தவர்களை கட்டுப்படுத்தி அடைத்துவைத்தல், மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு தேடப்படுவதாகவும் அவர் கூறினார்.
“நாங்கள் பந்தலை அணுகி, இது இந்துக்களுக்கு பெரும் விரோதத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை தொடர்ந்து செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் சொன்னோம்,” என்று அவர் கூறினார்.
அங்குள்ள தொண்டர்கள், நித்யானந்தா, சிவனின் மறுபிறவி என்று கூறியதாகவும், அவரை தொடர்ந்து அப்படியே சித்தரிப்பார்கள் என்றும் சொல்லியுள்ளனர்.
“ஒரு இந்து என்ற வகையில், இந்த குழு எனது மதத்தை அவமதிக்கிறது என்ற விசயத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. கடவுளை ஒரு மோசடி பேர்வழியுடன் ஒப்பிடுகின்றனர். இந்தியாவில் கடுமையான குற்றச் செயல்களுக்கு இவனைத் தேடிக்கொண்டிருக்கின்றனர், என்று சதீஸ் கூறினார்.