கொரோனா கிருமி தொற்றுநோய்களைக் கண்டறிய 12 பொது மருத்துவமனைகள், சுகாதார ஆய்வுக்கூடங்கள்

கொரோனா கிருமி தொற்றுநோய்களைக் கண்டறிய 12 பொது மருத்துவமனைகள், சுகாதார ஆய்வுக்கூடங்கள்

கொரோனா வைரஸ் | ஜனவரி 30 முதலாகவே, கொரோனா கிருமியைக் கண்டறிய, சோதனைகளை மேற்கொள்ளும் திறனுடன் நாடு முழுவதும் 12 பொது மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார ஆய்வுக்கூடங்களையும் சுகாதார அமைச்சு மேம்படுத்தியுள்ளது.

தரங்கள் உயர்த்தப்பட்டிருக்கும் அவை, சுங்கை புலோவில் உள்ள தேசிய பொது சுகாதார ஆய்வகம் (எம்.கே.ஏ.கே)/ National Public Health Laboratory (MKAK) in Sungai Buloh, எம்.கே.ஏ ஈப்போ MKA Ipoh, எம்.கே.ஏ கோத்தா கினாபாலு MKA Kota Kinabalu, எம்.கே.ஏ கோத்தா பாரு MKA Kota Bharu மற்றும் எம்.கே.ஏ ஜோகூர் பஹ்ரு MKA Johor Bahru, ஆகும்.

ஒவ்வொரு நாளும் (பொது விடுமுறைகள் உட்பட), காலை 7 மணியளவில், அங்கு உள்ள ஊழியர்கள் மருத்துவமனைகளில் இருந்து மாதிரிகளைப் பெறத் தயாராக இருப்பதாகவும், தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் முடிவுகள் வெளியிடப்படும் வகையில் சோதனைகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.

“இருப்பினும், பெரும்பாலான சோதனைகளின் முடிவுகள் 24 மணி நேரத்திற்கு முன்பே தயாராக உள்ளன,” என்று அவர் கூறினார்.

தகுதிச் சோதனைக்கு உட்பட்ட ஊழியர்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே சோதனைகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஊழியர்கள் மாதிரிகளைப் பெற்று அதை பதிவு புத்தகத்தில் பதிவு செய்வார்கள் என்றார்.

பின்னர் அந்த மாதிரிகள் உயிர் பாதுகாப்பு ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்படும், அங்கு ஊழியர்கள் அதை நிகழ்நேர ஆர்டி-பி.சி.ஆர் 2019-என்.சி.ஓ.வி மூலம் கொரோனா கிருமியைக் கண்டறிய, சோதனைகளை மேற்கொள்வார்கள், என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

  • பெர்னாமா