சிங்கப்பூரில் வுஹான் வைரஸின் இரண்டு புதிய பாதிப்புகள், மொத்தம் 45 பதிவுகள்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுகாதார அமைச்சு (MoH) அக்குடியரசில் கொரோனா வைரஸின் (2019-nCoV) மேலும் இரண்டு பாதிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. இது அந்நாட்டில் மொத்த பதிவுகளை 45 ஆக உயர்த்தி உள்ளது.

இந்த பாதிப்புகளில் ஒன்று 37 வயதான சிங்கப்பூர் குடிமகன், மற்றொன்று வுஹானில் இருந்து ஜனவரி 30 அன்று வெளியேற்றப்பட்ட இரண்டு வயது சிங்கப்பூர் சிறுமி ஆவார்.

திங்களன்று குணமடைந்த ஒரு நோயாளி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இது, தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டவர்களின் எண்ணிக்கையை ஏழுக்கு கொண்டு வந்தது.

இன்னும் மருத்துவமனையில் உள்ள உறுதிப்படுத்தப்பட்ட 38 பாதிப்புகளில், பெரும்பாலானவர்கள் சீரான நிலையில் உள்ளனர், அல்லது மேம்பட்டு வருகின்றனர். அதில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், என்று அறியப்படுகிறது.