‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ குறித்து அம்னோ இன்னும் முடிவு எடுக்கவில்லை

பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவுக்கு பாஸ் கட்சியின் ஆதரவு குறித்து அம்னோ இன்னும் ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று அம்னோவின் துணைத் தலைவர் மாட் ஹசான் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து பாஸ் துணைத் தலைவர் இப்ராஹிம் மான் தனக்கு அறிவித்துள்ளார் என்று ஹசான் தெரிவித்தார்.

“இந்த விடயம் கட்சியின் பார்வைக்கு கொண்டு வரப்படும், நேரம் வரும்போது ஒரு முடிவு எடுக்கப்படும்”, என்றார்.

“இது பாஸ் கட்சியின் ஏற்பாடு. அது என்ன என்பதை அறிய நாங்களும் விரும்புகிறோம். இது குறித்து நாங்கள் கட்சி மட்டத்திலும் விவாதிப்போம், நேரம் வரும்போது நாங்கள் முடிவு செய்வோம்” என்றார்.

கடந்த சனிக்கிழமை, பாஸ் கட்சியின் இப்ராஹிம், ஹராப்பானின் ஆட்சி காலம் முடியும் வரை மகாதீர் பிரதமராக இருப்பதற்கு ஆதரவாக ‘நம்பிக்கை வாக்கெடுப்பை’ கொண்டுவருவதாக அறிவித்தார்.

பல தரப்பினர் பிரதமரின் தலைமைத்துவத்தில் “அதிருப்தி” அடைந்துள்ள பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை, எந்தவொரு தரப்பும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை அளிக்கவில்லை.