20 ஆண்டுகள் காத்திருந்தாகிவிட்டது, இன்னும் ஆறு மாதங்கள் காத்திருப்பது ஒரு பிரச்சினை அல்ல” – அன்வார்

மகாதீர் மீதான நம்பிக்கை தீர்மானம்: நேர்மையாக இருக்கட்டும் என்று அன்வர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்வர் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் ஃபர்ஹாஷ் வாஃபா சால்வடார் ரிசால் முபாரக் (Farhash Wafa Salvador Rizal Mubarak), டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி, அன்வார் பிரதமராவதைத் தடுக்கும் ஒரு தீர்க்கமான நடவடிக்கை என்றார்.

இன்று பிற்பகல் அவரின் கருத்துக்களுக்காக மலேசியாகினி தொடர்பு கொண்ட போது ஃபர்ஹாஷ் இதனைக் கூறினார்: “நேர்மையாக பேசுவோம், இது உண்மையில் ஒரு தீங்கிழைக்கும் முயற்சி.”, என்றார்.

எவ்வாறாயினும், அன்வரின் தரப்பில் இந்த நடவடிக்கை பீதியை ஏற்படுத்தவில்லை என்று ஃபர்ஹாஷ் கூறினார், ஏனெனில் பாராளுமன்றத்தில் அவருக்கு ஆதரவளிக்க போதுமான சபை உறுப்பினர்கள் இருப்பதாக பி.கே.ஆர் தலைவர் நம்புவதாகக் ஃபர்ஹாஷ் தெரிவித்தார்.

“நாங்கள் இதைப் பற்றி கவலைப்படவில்லை. அன்வாரும் அதை பல முறை குறிப்பிட்டுள்ளார். துன் மகாதீர் இப்போது நாட்டை வழிநடத்தும் சக்தியும் நம்பிக்கையும் கொண்டவர். பதவி மாற்றம் நடக்கும். மேலும் அன்வார் இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்க தயங்க மாட்டார்” என்று அவர் மேலும் கூறினார்.

மகாதீரை ஆதரிக்கும் திட்டம், பாஸ் கட்சியினால் முன்மொழியப்பட்டது. அடுத்த மாதம் சட்டமன்றத்தில் இது தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மகாதீர் அவர்களே இதிலிருந்து விலகி இருப்பதாகத் தெரிகிறது.

இருப்பினும், பிரதமரும் அவருடன் இருக்கும் சிலரரும் தான் இந்த தீர்மானத்தை செயல்படுத்த சொன்னதாக சிலர் நம்புமகின்றனர்.

இது குறித்து கேட்டபோது, ஃபர்ஹாஷ் அதைப்பற்றி ஊகிக்க மறுத்துவிட்டார்

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில், அன்வார், மகாதீர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய அவகாசம் அளிக்க இன்னும் ஆறு மாதங்கள் காத்திருப்பதைப் பொருட்படுத்தவில்லை என்றார்.

“20 ஆண்டுகள் காத்திருந்தாகிவிட்டது, இன்னும் ஆறு மாதங்கள் காத்திருப்பது ஒரு பிரச்சினை அல்ல” என்று அவர் கூறினார்.