” வுஹான் வைரஸ் – இந்த மாதத்தின் நடுவில் அல்லது பிற்பகுதியில் உச்சத்தை அடையலாம்” என்கிறார் சீன நிபுணர்

இறப்பு எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியுள்ள வுஹான் வைரஸ் விரைவில் உயரக்கூடும் என்று சீன நிபுணர் கூறுகிறார்.

ஷாங்காய் (பிப்ரவரி 11): சீனாவின் கொரோனா வைரஸ் தொற்று விரைவில் உயரக்கூடும் என்று சீனாவின் முக்கிய நிபுணர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இறப்பு எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளது. சீனா, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு நிறுவனங்கள் மீண்டும் வேலையைத் தொடங்க சிரமப்படுகின்றன. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான சீன நிறுவனங்கள் இயங்குவதற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் கடன்கள் தேவை என்று கூறுகின்றன. பரவலான பணிநீக்கங்கள் தொடங்கிவிட்டன. இது தவிர்க்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உத்தரவாதம் இருந்தபோதிலும், பணிநீக்கங்கள் தொடங்கியுள்ளன.

இந்த பாதிப்பு குறித்த அரசாங்கத்தின் உயர் மருத்துவ ஆலோசகர் ஜாங் நன்ஷான்/ Zhong Nanshan, பிப்ரவரி மாதத்தில் தொற்றுநோய் உச்சம் பெறக்கூடும், பின்னர் குறையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

“இந்த மாதத்தின் நடுவில் அல்லது பிற்பகுதியில் உச்ச கட்டத்தை அடையலாம்” என்று
2003-ஆம் ஆண்டில் கடுமையான சுவாச நோய்க்குறி (SARS – Severe Acute Respiratory Syndrome) பாதிப்பை எதிர்த்துப் போராடியதற்காக புகழ் பெற்ற தொற்றுநோயியல் நிபுணரான ஜாங் ராய்ட்டர்ஸிடம் ஒரு பேட்டியில் கூறினார்.

சில மாகாணங்களில் ஏற்கனவே புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Reuters
February 11, 2020