1 எம்.டி.பி/1MDB ஊழலை அம்பலப்படுத்திய துணிச்சலுக்காக சில முன்னாள் மூத்த அரசாங்க அதிகாரிகள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் சிறப்பு அங்கீகாரம் பெற்றனர்.
விருது குறித்து உரையாற்றிய மகாதீர், அவர்கள் முன்னாள் வழக்கறிஞர்கள், அப்துல் கனி படேல் Abdul Gani Patail, டாக்டர் ஜெட்டி அக்தர் அஜீஸ் Dr Zeti Akhtar Aziz (பேன்க் நெகாராவின் முன்னாள் கவர்னர்) மற்றும் மொஹட் சுக்ரி அப்துல் Mohd Shukri Abdull (முன்னாள் தேர்தல் (SPRM) தலைமை ஆணையர்) என்று கூறினார்.
“தங்கள் பணிக்காக இவ்வளவு தியாகம் செலுத்தும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் அனைவரும் வீரர்கள் என்பதை உலகுக்குச் சொல்ல நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்று புத்ராஜெயாவில் சர்வதேச ஊழல் தடுப்பு அறக்கட்டளையின் [Yayasan Juara Antirasuah Antarabangsa Perdana] தொடக்கத்தில் சிறப்புரையாற்றினார்.
அப்துல் கானி, ஜெட்டி மற்றும் மொஹமட் சுக்ரியின் பெயர்களை மேற்கோள் காட்டிய, மகாதிர், 1 எம்.டி.பி/1MDB ஊழலை அம்பலப்படுத்தி, இன்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நீதிமன்றத்தில் நம்பிக்கை மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி போன்ற பல விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
“இது அரசியல் திசையில் திருப்புமுனையாக அமைந்த ஒரு குறிப்பிடத்தக்க வழக்கு, மேலும் மலேசியர்களிடையே எழுச்சியைத் தூண்டியுமுள்ளது”. என்றார்.
இந்நிகழ்ச்சியில், சர்வதேச ஊழல் தடுப்பு வீரர் விருது, முன்னாள் துணை வக்கீல் அந்தோணி கெவின் மொராய்ஸ்/Anthony Kevin Morais மற்றும் இந்தோனேசியாவின் முன்னாள் ஊழல் தடுப்பு அதிகாரி நாவல் பாஸ்வேடன்/Novel Baswedan ஆகிய இருவருக்கும் கிடைத்தது.
ரிச்சர்ட் மொரைஸ், தனது தம்பி கெவின் சார்பாக விருதைப் பெற்றார்.
2015-ல் ஊழல் வழக்கைக் கையாளும் போது மொரைஸ் கொலை செய்யப்பட்டார், ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் முன்னாள் அதிகாரி நாவல் – ஜூன் 2016 இல் அமிலவீச்சு காரணமாக கண் இழந்தார்.
இன்னும் பல தைரியமான அதிகாரிகள் தங்கள் நேர்மைக்காக போராட வேண்டியிருக்கிறது. மொராய்ஸ் மற்றும் நாவலுக்கு வழங்கப்பட்ட விருதுகள் அவர்கள் எல்லோர் மீதான எங்கள் பாராட்டுக்கு அடையாளமாகும்” என்று மகாதீர் கூறினார்.