மனித கடத்தலின் போது கவிழ்ந்த ரோஹிங்கியா படகு

மனித கடத்தலின் போது கவிழ்ந்த ரோஹிங்கியா படகு

பங்களாதேஷ் கடலில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களில் 15 பெண்களும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். அவர்கள், மலேசியாவிற்குள் மணப்பெண்களாக மனித கடத்தல் செய்யப்பட்டுள்ளனர்.

13 மீட்டர் நீளமுள்ள இழுவைப் படகில் இருந்த 130 அகதிகளில் எழுபத்து நான்கு பேர் தப்பினர்.

தப்பியவர்களில், இரண்டு சந்தேக நபர்கள் மனித கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றனர். அந்நபர்களை அதிகாரிகள் விசாரிக்கின்றனர் என்று பங்களாதேஷ் பிபிசி தெரிவித்துள்ளது.

படகில் இருந்த ரோஹிங்கியா இளம் பெண் அகதிகள் மலேசியாவுக்கு மணமகள்களாவதற்கு கடத்தப்பட்டவர்கள் என காவல்துறை அதிகாரி மசூத் ஹொசைன் தெரிவித்தார்.

கடலோர ரோந்து கப்பல்கள் மற்றும் காவல்படையினர் செயின்ட் மார்டின்ஸ் தீவுக்கு அருகே தலைகீழாக இந்த படகை கண்டுபிடித்ததாகவும், கடத்தல்காரர்கள் என்று நம்பப்படும் இன்னொரு படகை தேடுவதாகவும் தெரிவித்தனர்.

“நாங்கள் இதுவரை இரண்டாவது படகு கண்டுபிடிக்கவில்லை. எங்கள் நடவடிக்கைகளைத் தொடருவோம்,” என்று காவலதிகாரி கூறினார்.

பங்களாதேஷின் நெரிசலான காக்ஸ் பஜாரின் (Cox Bazaar) அகதி முகாமில் இருந்து மலேசியாவை அடைய ஒரு மில்லியன் ரோஹிங்கியா மக்கள் கடலைக் கடக்க முயற்சிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

முன்னதாக, மலேசியாவில் வசிக்கும் ரோஹிங்கியா ஆண்களுக்கு, மணப்பெண்களாக ஆவதற்கு அகதிகள் முகாம்களில் இருந்து ரோஹிங்கியா பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுவதாகவும் செய்தி வெளியிட்டப்பட்டன.

கடந்த ஆண்டு, பங்களாதேஷை விட்டு வெளியேற படகுக்காக காத்திருந்த 500க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்களை பங்களாதேஷின் அமலாக்க நிறுவனம் தடுத்துள்ளது.

2019-ல் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஏழு கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

நவம்பர் முதல் மார்ச் வரை கடல் மட்டம் சீரான நிலையில் இருக்கும் என்பதால், கடத்தல் அதிகரிக்கின்றன.

2015 ஆம் ஆண்டில், சுமார் 25,000 ரோஹிங்கியாக்கள் தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியாவைக் கடக்க முயன்ற படகுகளின் மூலம் பங்களாதேஷ் மற்றும் மியான்மரை விட்டு வெளியேறினர். அதில் பெரும்பாலான படகுகள் கவிழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.