மலேசியாவில் கொரோனா வைரஸின் 19-வது பாதிப்பு
கோலாலம்பூரில், 2019 கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுநோய்க்கு மற்றொரு சீனர் பாதித்து இருப்பதை உறுதிசெய்து, நாட்டில் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கையை 19-ஆக உயர்த்தியுள்ளது.
39 வயதான பெண் 14-ஆவது பாதிப்பின் நண்பர் ஆவார். 14-ஆவது பாதிப்பில் சிக்கியவர், சீனாவின் வுஹான் நகரைச் சேர்ந்த 37 வயதான சுற்றுலாப் பயணி என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர் 16-வது பதிப்பின் மகனும் ஆவார். 16-ஆவது பாதிப்பில் சிக்கியவர், 67 வயதான வுஹானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஆவார்.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இம்மூவரும், மேலும் இருவருடன், ஜனவரி 25 அன்று மலேசியா வந்தடைந்தனர்.
பிப்ரவரி 5 மற்றும் 7 தேதிகளில் முறையே 14 மற்றும் 16வது பாதிப்புகள் கோவிட் -19 உறுதி செய்யப்பட்டவுடன் அந்த 19-வது பெண் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டார்.
“மாவட்ட சுகாதார அலுவலகம் (பி.கே.டி) அவர் மீது மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் முடிவுகளில், அவருக்கு பிப்ரவரி 12-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகளைக் காணத் தொடங்கியது.
“அவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு (எச்.கே.எல்) மேல் சிகிச்சை மற்றும் விசாரணைக்காக வார்டில் அனுமதிக்கப்பட்டார். கோவிட் -19 சோதனை மற்றும் உறுதிபடுத்தும் சோதனை அதே நாளில் அறிவிக்கப்பட்டது. அவர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அவர் தற்போது எச்.கே.எல் தனிமை வார்டில் வைக்கப்பட்டு சீரான நிலையில் உள்ளார் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே அறிக்கையில், சீனாவின் வுஹானில் இருந்து மலேசியர்களை அழைத்து வருவதற்கான ஒரு பணியைத் தொடர்ந்து, பிப்ரவரி 6 முதல் மனநலம் மற்றும் சமூக ஆதரவு குழு/ Pasukan Kesihatan Mental Dan Sokongan Psikososial (MHPSS) செயல்பாட்டில் உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.
மேற்பார்வையின் கீழ் உள்ள தனிநபர்கள், அமைச்சக ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களுக்கு இந்த குழு உளவியல் ஆதரவு சேவைகளை வழங்குகிறது என்றார்.
“கடுமையான மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக இதுவரை இரண்டு நபர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன, அவர்கள் சீரான நிலையில் உள்ளனர்” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.