சதித்திட்டத்தில் மகாதீர் ஈடுபடவில்லை – அன்வார் இப்ராஹிம்
அடுத்த பொதுத் தேர்தல் வரை பிரதமராக பதவியில் நீடிக்க ஆதரவை வழங்குவதற்காக சட்டப்பூர்வ உறுதிமொழியை நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து திரட்ட பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட் வற்புறுத்தல் முயற்சியில் ஈடுபடவில்லை என அன்வார் இப்ராஹிம் கூறினார்
எட்டாவது பிரதமர் ஆவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள பி.கே.ஆர் தலைவர் அன்வார், மகாதீரைச் சந்தித்து பதவி மாற்றம் குறித்து விவாதித்த பின்னர், இதைத் தெரிவித்தார்.
“பாஸ், அம்னோவின் குழு மற்றும் பி.கே.ஆர் உறுப்பினர்களின் ஒரு சிறிய குழு ஆகியவற்றின் முயற்சியால் அந்த உறுதிமொழி தயாரிக்கப்படுகிறது என்பதால், நான் இந்த விடயத்தை எழுப்பினேன். பிரதமர் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. அவர் வாக்குறுதியளித்தபடி ராஜினாமா செய்வேன் என்ற உறிதியை மீண்டும் கூறினார்,” என்று அன்வார் கூறினார்.
இன்று பிற்பகல் ஒரு அறிக்கையில், அன்வார், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்)/ Sidang Kemuncak Kerjasama Ekonomi Asia Pasifik (Apec) உச்சிமாநாட்டின் இறுதி வரை மகாதீர் பிரதமராக நாட்டை தொடர்ந்து வழிநடத்துவார் என்று நம்புவதாகக் அன்வார் கூறினார்.
“இருப்பினும், பிப்ரவரி 21 அன்று நடைபெறும் பக்காத்தான் ஹராப்பன் (பி.எச்) கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.
“ஒரு தந்திரமான சதித்திட்டம்” குறித்து மகாதீருக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். பாக்காத்தான் தலைவர்கள் ஏழாவது பிரதமராக மகாதீரையும் எட்டாவது பிரதமராக அன்வாரையும் ஆதரிக்கும் என்ற ஒப்பந்தத்தைக் கட்டிக்காப்பார்கள்”, என்று அவர் கூறினார்.