கெவின் மொரைஸை பாராளுமன்றம் கவுரவிக்க வேண்டும்
லிம் கிட் சியாங்
எம்.பி பேசுகிறார் | ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு பேசப்படாத நிகழ்வு செவ்வாயன்று நடந்துள்ளது – மறைந்த மூத்த துணை அரசு வக்கீல் கெவின் மொராய்ஸுக்கு மரணத்திற்குப் பின் விருது ஒன்று கிடைத்துள்ளது.
பெர்டானா சர்வதேச ஊழல் தடுப்பு அறக்கட்டளையை International Anti-Corruption Champion (PIACCF) அறிமுகப்படுத்திய விழாவில் பெர்டானா சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் 2020 விருதை இறந்த மொராய்சுக்கு வழங்கி கவுரவித்தனர்.
அந்நிகழ்ச்சியில், “பல தைரியமான அதிகாரிகள் தங்கள் நேர்மைக்காக போராட வேண்டியிருக்கிறது. மொராய்ஸ்சுக்கு வழங்கப்பட்ட விருது அவர்கள் எல்லோர் மீதான எங்கள் பாராட்டுக்கு அடையாளமாகும்” என்று மகாதீர் கூறினார்.
(1MDB)/1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாத் ஊழலை அம்பலப்படுத்தியதில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் அப்துல் கனி படேல், முன்னாள் வங்கி நெகாரா கவர்னர் ஜெட்டி அக்தர் அஜீஸ் மற்றும் முன்னாள் எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் மொஹமட் சுக்ரி அப்துல் ஆகியோரின் பங்களிப்புகளையும் மகாதீர் தனது உரையில் மேற்கோள் காட்டினார்.
“இது அரசியல் திசையில் திருப்புமுனையாக அமைந்த ஒரு குறிப்பிடத்தக்க வழக்கு, மேலும் மலேசியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி எழுச்சியைத் தூண்டியுமுள்ளது”. என்றார்.
“அவர்களின் கூட்டு தைரியமும் உறுதியும், ஒரு ஆளுமைத்தன ஆட்சியை வீழ்த்தியுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
அடுத்த மாதம் மீண்டும் கூடும் பாராளுமன்றம், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தனது உயிரைக் இழந்த கெவின் மொராய்ஸையும், 1 எம்.டி.பியிலிருந்து மலேசியாவைக் காப்பாற்றிய அனைத்து வீரர்களையும் கவுரவப்படுத்த வேண்டும்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள், குறிப்பாக Muafakat Nasional, அவர்கள் மகாதீரின் பிரதமர் ஆட்சியை ஆதரிப்பதாகக் கூறுகிறார்கள்.
மலேசியாவை ஊழலில் இருந்து மாற்றுவதற்கான மகாதீர் மற்றும் பக்காத்தான் ஹரப்பனின் உறுதிப்பாட்டை அவர்கள் ஆதரிக்கிறார்களா என்பது இதன் மூலம் தெரியவரும். பொது ஒருமைப்பாடு மற்றும் ஊழலுக்கு எதிரான இடைவிடாத போராட்டத்தில், குறிப்பாக 1MDB ஊழல் ஆகியவற்றில் மலேசியா உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இருப்பது இனி புலப்படும்.
1 எம்டிபி ஊழல் குறித்து இனி கேட்க விரும்பவில்லை என்றும் மலேசியாவில் ஊழல் இன்னும் பரவலாக இருக்கிறது என்றும் சில மலேசியர்களும் புகார் கூறுகின்றனர். இந்த சிந்தனையை எதிர்க்கட்சிகள் ஊக்குவிக்கின்றன. பாஸ், அம்னோ, எம்சிஏ, எம்ஐசி மற்றும் கெரகன், 1 எம்.டி.பி ஊழலை பொது நினைவிலிருந்து அழித்து, மலேசியாவை கடந்த கால ஊழல் மற்றும் ஆளுமைத்தனத்துக்கு திரும்பிச்செல்ல இவர்கள் விரும்புகிறார்கள்.
ஆம், மலேசியாவில் ஊழல் இன்னும் ஒரு கடுமையான பிரச்சினையாகத்தான் உள்ளது, இதனால்தான் மலேசியா 180 நாடுகளில், 51 இடத்தில் உள்ளது. Transparency International Corruption Perception Index 2019/டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஊழல் புலனுணர்வு குறியீடு 2019-இல், 180 நாடுகளில் 100 மதிப்பெண்களில் 53 மதிப்பெண்களுடன் உள்ளது மலேசியா. இது கடந்த 25 ஆண்டுகளில் மலேசியா அடைந்த சிறந்த மதிப்பெண்களில் ஒன்றாகும். இருப்பினும், இது இன்னும் போதாது.
கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை என்றால், சர்வதேச ஊழல் உணர்வுக் குறியீட்டிலும் அதன் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் மலேசியாவின் தரவரிசை மற்றும் மதிப்பெண் மேலும் வீழ்ச்சியடைந்து 70 மற்றும் 80-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கும். இது சுய மரியாதைக்குரிய மலேசியர்களுக்கு பெரும் அவமானமாய் இருந்திருக்கும்.
மே 9, 2018 அன்று அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படாமல் இருந்திருந்தால், நாட்டில் பரவலாக ஊழல் மற்றும் ஆளுமைத்தன நிலையில் ஒரு அர்த்தமுள்ள திருப்பத்தை ஏற்படுத்த முடியாமல் போயிருக்கும். எதிர்க்கட்சி, குறிப்பாக Muafakat Nasional, அதைத்தான் விரும்புகிறது.
கடந்த காலத்தின் பரவலான ஊழல் மற்றும் ஆளுமைத்தனத்திற்கு மலேசியர்கள் திரும்ப வேண்டுமா அல்லது மலேசியர்கள் ஒரு புதிய எதிர்காலத்திற்கு முன்னேற விரும்புகிறார்களா என்பது தான் இப்போதைய கேள்வி. ஊழலும் ஆளுமைத்தனமும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஒன்று; சகித்துக்கொள்ள முடியாத ஒன்று என்பதை நாம் உணர வேண்டும்!
லிம் கிட் சியாங் இஸ்கண்டார் புத்ரியின் நாடாளமன்ற உறுப்பினர்.
இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் படைப்பாளர் / பங்களிப்பாளரின் கருத்துக்கள் மட்டுமே. அவை மலேசியாகினியின் கருத்துக்களைக் குறிக்கவில்லை.