நான்கு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் முழு குணமடைந்துள்ளனர்

நான்கு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் முழு குணமடைந்துள்ளனர்

கொரோனா வைரஸ் | முன்னதாக கொரோனா வைரஸ் நோய் 2019 (கோவிட்-19) என கண்டறியப்பட்ட மேலும் 4 பேர் இன்று முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

“இறையருளால், 1, 2, 3 மற்றும் 5-வது பாதிப்பு என்ற நான்கு நபர்கள் இன்று மருத்திவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 19 நபர்களில் ஏழு பேர் இப்போது முழுமையாக மீண்டு மருத்திவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்”, என்று சுல்கிப்ளி இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1, 2, 3 மற்றும் 5 பாதிப்பு நபர்கள் சீன புத்தாண்டு விடுமுறை நாட்களில் சிங்கப்பூரிலிருந்து மலேசியா வந்த ஒரு குடும்பமாகும். இதில் 66 வயது பெண், 11 மற்றும் 2 வயதுடைய அவரது இரண்டு பேரக்குழந்தைகள் மற்றும் அவரது 36 வயது மருமகள் என்று தெரியவருகிறது.

இதற்கு முன்னர் மற்ற மூன்று பாதிப்புகள் முழுமையாக குணமடைந்துள்ளனர் – அவர்கள், நான்கு வயது சிறுமி, 40 வயது ஆடவர் மற்றும் 63 வயது ஆடவர் ஆகும். இவர்கள் மூவரும் சீனா பிரஜைகள்.

கோலாலம்பூரில், கோவிட்-19க்கு மற்றொரு சீன நாட்டவர் இன்று தொற்று நோய்க்கு ஆளாகியுள்ளார். இதன் மூலம், மலேசியாவில் பதிவான எண்ணிக்கையை 19ஆக உயர்த்துள்ளது.