15 வயது சிறுவன் மீதான தாக்குதல்; 12 பள்ளி மாணவர்கள் தடுப்பு
பசீர் மாஸ், பிப்ரவரி 14 – பசீர் மாஸில் 3-ஆம் படிவம் மாணவர் மீது தாக்குதல் நடத்தியதில் 12 பதின்ம வயதினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் 15 வயது சிறுவன் சம்பந்தப்பட்ட தாக்குதல் வழக்கு தொடர்பாக 12 பள்ளி மாணவர்களை போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரைத் தொடர்ந்து மாணவர்கள் நேற்று மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பசீர் மாஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ராய் சுஹைமி தெரிவித்தார்.
“ஒன்பது மாணவர்கள் பள்ளியில் பிடிபட்டுள்ளனர், மேலும் இருவர் தங்கள் வீடுகளில் கைது செய்யப்பட்டனர், ஒருவர் பசீர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்தார்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 147ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டதாகவும், உடல் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒரு பெண்பிள்ளை குறித்து இச்சண்டை வந்ததாக நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ கிளிப்பும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
– பெர்னாமா